பிறந்த 24 மணி நேரத்திற்குள் ஒரு வருடத்தி 10 இலட்சம் குழந்தைகள் பலியாகின்றனராம்!!

333

babyஇங்கிலாந்து நாட்டை சேர்ந்த தொண்டு நிறுவனம் ஒன்று குழந்தைகள் பிறப்பு தொடர்பாக உலக அளவில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர்.

அதில் ஒவ்வொரு ஆண்டும் பிறந்த 24 மணி நேரத்திற்குள் சுமார் 10 இலட்சம் குழந்தைகள் உயிர் இழக்கிறார்கள் என்ற திடுக்கிடும் தகவல் கிடைத்தது.

இதற்கு குறைப்பிரசவம், கவனக்குறைவு, தொற்று நோய்கள், நீண்டநேர பிரசவம் மற்றும் முறையான பிரசவ வசதிகள் இல்லாத குறைபாடுகள் ஆகியவையே காரணம் என்கிறார்கள்.

மேலும் 40 இலட்சம் பெண்கள் சரியான நபர்கள் உதவி இல்லாமல் குழந்தை பெறுகிறார்கள் என்றும் 10 பேருக்கு ஒரு நபருக்கே முறையான வாய்ப்புகள் கிடைக்கிறது என்றும் கூறுகிறார்கள்.

ஆகவே முறையான பயிற்சி பெற்றவர்களை மட்டுமே பிரசவ பணிக்கு அமர்த்த வேண்டும் என்றும் அதை மீறினால் குற்ற நடைமுறை சட்டத்தில் தண்டிக்க வேண்டும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் யோசனை தெரிவிக்கின்றனர்.