வவுனியா பாடசாலைகளில் தொற்று நீக்கும் செயற்பாடு முன்னெடுப்பு!!

472


தொற்று நீக்கும் செயற்பாடு..


கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்ட பாடசாலைகள் மீண்டும் 23ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் பாடசாலைகளில் தொற்று நீக்கும் செயற்பாடு வவுனியா நகரசபையினால் இன்று முன்னெடுக்கப்பட்டது.நகரசபையின் முகாமைத்துவ உதவியாளர் து.சபேசன் தலைமையில் இடம்பெற்ற குறித்த செயற்பாடுகள் 8 பாடசாலைகளில் இன்று முன்னெடுக்கப்பட்டிருந்தன.


இதேவேளை தொடர்ச்சியாக நகரசபையினால் தொற்று நீக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.