வவுனியாவில் சுகாதார நடைமுறைகளை மீறிய 20க்கு மேற்பட்டவர்கள் ஒரு வாரம் சுயதனிமைப்படுத்தலில்!!

1196


சுயதனிமைப்படுத்தல்..



கொவிட் 19 இன் தாக்கம் நாட்டில் அதிகரித்து வரும் நிலையில் கொவிட் -19 தாக்கம் அற்ற வவுனியாவை கட்டியேழுப்புவோம் எனும் எண்ணக்கருவில் வவுனியா மாவட்ட சுகாதார பிரிவினர் சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டிருந்தனர்.



இதன் போது வர்த்தக நிலையங்களில் முகக்கவசம் சீராக அணியாத பணியாளர்கள், வீதியில் முகக்கவசமின்றி பயணித்தவர்கள், தரமற்ற முகக்கவசங்களை அணிந்திருந்தவர்கள்.




என பலரை சுகாதார பரிசோதகர்கள் இணங்கண்டதுடன் அவர்களின் பெயர் விபரங்களை திரட்டியதுடன் குறித்த நபர்களை சுகாதார திணைக்களத்திற்கு சமூகமளிக்குமாறு திகதியும் வழங்கப்பட்டிருந்தது.


இந்நிலையில் சுகாதார பரிசோதகர்களினால் வழங்கப்பட்ட திகதியில் சில நபர்கள் மாத்திரமே சுகாதார திணைக்களத்திற்கு வருகை தந்திருந்திருந்ததுடன் வருகை தந்தவர்களுடன் சுகாதார பிரிவினர் கலந்துரையாடல் மேற்கொண்டதுடன் எச்சரிக்கையும் விடுத்திருந்தனர்.

சுகாதார நடைமுறைகளில் மீறி செயற்பட்டதுடன் சுகாதார பிரிவினரின் உத்தரவினை மீறிய மிகுதி 20க்கு மேற்பட்டவர்களை சுகாதார பிரிவினர் அவர்களின் வீடுகளிலேயே ஒரு வாரம் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தினர்.


சுகாதார பிரிவினரின் இவ் அதிரடி நடவடிக்கையினால் வவுனியா மாவட்ட மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவார்கள் என சமூக ஆர்வளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.