வவுனியா பண்டாரிக்குளத்தில் டெங்கு ஒழிப்பு செயற்றிட்டம் முன்னெடுப்பு!!

773


டெங்கு ஒழிப்பு செயற்றிட்டம்…



வவுனியா பண்டாரிக்குளம் பகுதியில் ‘டெங்கு நோயற்ற வவுனியாவை உருவாக்குவோம்’ எனும் தொனிபொருளில் இன்று (21.11.2020) காலை டெங்கு ஒழிப்பு செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டது.



வவுனியா பொது சுகாதார பரிசோதகர் வாகீசன் தலைமையில் பண்டாரிக்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விமல் பியரத்ன வழிகாட்டலின் கீழ் முன்னெடுக்கப்பட்ட இச் செயற்றிட்டத்தில் பண்டாரிக்குளம் பொலிஸார் மற்றும் பண்டாரிக்குளம் சிவில் பாதுகாப்பு குழுவினரும் பங்குபற்றியிருந்தனர்.




குறித்த குழுவினர் பண்டாரிக்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் வீடு வீடாகச் சென்று டெங்கு பரவும் இடங்களை சோதனையிட்டதுடன் டெங்கு பரவும் அபாயத்துடன் காணப்பட்ட வீடுகளுக்கு எச்சரிக்கை கடிதமும் வழங்கினர்.


மழையுடான தற்போதைய காலப்பகுதியில் டெங்கு நுளம்பு பரவும் அபாயம் காணப்படுவதனால் வடிகான்கள், வீட்டின் கூரைகளில் நீர் தேங்குவது, குளிர்சாதன பேட்டியின் பின்பகுதி போன்றவற்றினை தினசரி பார்வையிட்டு சுத்தம் செய்யுமாறும் பொதுசுகாதார பரிசோதகரினால் பொதுமக்களுக்கு கோரிக்கையும் விடுக்கப்பட்டது.