வவுனியாவில் கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் தேசிய வேலைத்திட்டம் தொடர்பான விசேட கலந்துரையாடல்!!

714

விசேட கலந்துரையாடல்..

ஜனாதிபதியின் ‘சுபீட்சத்தின் நோக்கு’ கொள்கை பிரகடனத்திற்கு அமைய மக்கள் மையப்படுத்தப்பட்ட பொருளாதாரத்தை தோற்றுவிப்பதற்காக அரசினால் அமுல்படுத்தப்படும் தேசிய பொருளாதார வேலைத்திட்டத்திற்கமைய கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் தேவை முன்னுரிமைப் பணியொன்று அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இத்திட்டத்தினை வெற்றிகரமாக செயற்படுத்துவது தொடர்பாக கலந்துரையாடலொன்று வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று (21.11.2020) இடம்பெற்றது.

வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.எம்.சமன் பந்துலசேன தலைமையில் இடம்பெற்ற இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் தி.தினேஷ்குமார், வவுனியா தெற்கு பிரதேச சபை தவிசாளர் து.நடராஜசிங்கம்,

வவுனியா வடக்கு பிரதேச சபை தவிசாளர் இ.தணிகாசலம் மற்றும் வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின் இணைப்பு செயலாளர் கி.டினேஸ் மற்றும் நகரசபை, பிரதேச சபை உறுப்பினர்கள், மாவட்ட செயலக அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது இத்திட்டத்தினை முன்னெடுப்பது தொடர்பான ஆலோசனைகள், செயற்பாடுகள் மற்றும் திட்டம் தொடர்பான விளக்கங்களும் வழங்கப்பட்டன.