தமது நண்பனின் நண்பியை திட்டமிட்டு கொல்லவில்லை : பிரிட்டன் நீதிமன்றில் இலங்கையர் சாட்சி!!

613

Courtதமது நண்பனின் நண்பியை வேண்டுமென்றே கத்தியால் குத்தி கொல்லவில்லை என்று இலங்கையர் ஒருவர் ஜூரிமார் முன்னிலையில் சாட்சியமளித்துள்ளார்.

இந்த இலங்கையர் பெற்றோல் நிரப்பு நிலையம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். புன்னகைராஜா செல்வராஜ் அவருடைய நண்பி மயூரதி பேரின்பமூர்த்தி, நண்பன் கோபிநாத் வெள்ளைச்சாமி ஆகியோர் ஒரே அடுக்கு மாடி வீட்டில் தங்கியிருந்தனர்.

இவர்கள் பிரித்தானியாவில் அரசியல் அடைக்கலம் கோரியிருந்தனர். இந்தநிலையில் நண்பனின் நண்பியின் நடத்தை போக்கு தமக்கு பிடிக்காமை தொடர்பில் நண்பனான செல்வராஜிடம் முறையிட்டதாகவும் கோபிநாத் குறிப்பிட்டார்.

தாம் தமது தந்தையால் கைவிடப்பட்ட நிலையில் தாய் தற்கொலை செய்துகொண்டமையால் பாட்டியால் பிரித்தானியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக கோபிநாத் ஜூரியிடம் கூறியுள்ளார்.

தாம் ஏற்கனவே மூன்று தடவைகள் தற்கொலைக்கு முயற்சித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் 2013ம் ஆண்டில் தாம் குடிபோதையில் இருந்த போதே மயூரதியை கொலை செய்தததாகவும் எனினும் அது திட்டமிட்டு மேற்கொள்ளப்படவில்லை என்றும் கோபிநாத் குறிப்பிட்டார். இந்தநிலையில் வழக்கு விசாரணை பிறிதொரு தினத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.