இலங்கை பெண்ணை கடத்திய மூவர் மலேசியாவில் கைது!!

617

Malaysaiஇலங்கை பெண் ஒருவர் கடத்தப்பட்ட சம்பவத்தில் மலேசியாவில் மூவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். கோலாலம்பூரில் உள்ள வங்கசா, மெலாவிட்டி பகுதியில் வைத்து குறித்த பெண் கடத்தப்பட்டார்.

கடத்தப்பட்ட 20 வயதுடைய இலங்கை பெண் மூன்று நாட்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் அப்பெண்ணை மீட்டுள்ளதாகவும் மலேசிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

கல்வி ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடவென குறித்த பெண்ணின் மைத்துனர் முறையான ஒருவர் 8 500 ரிங்கிங் பணத்தை கோரியுள்ளார். எனினும் அந்த பணத்தை கொடுக்க மறுத்ததால் இக்கடத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று முற்பகல் வீடொன்றை சோதனையிட்ட பொலிஸார் அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த பெண்ணை மீட்டுள்ளனர்.

அந்த வீட்டில் இருந்து இரு இலங்கையர்களை கைது செய்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்ட பின் மூன்றாவது சந்தேகநபரையும் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்கள் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை இடம்பெற்று வருகிறது.