வெளிநாட்டில் இருந்து வீடு திரும்பிய கணவனுக்கு மனைவியால் காத்திருந்த அ திர்ச்சி!!

48923

புதுக்கோட்டை..

வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த கணவன், வீட்டிற்கு திரும்பிய நிலையில், அவருடைய மனைவி வேறொரு நபருடன் குடும்பம் நடத்தி வருவதைக் கண்டு பெரும் அ திர்ச்சியடைந்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலையில் வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் ராஜேஸ்வரி. இவருக்கும் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த சாமி என்பவருக்கும் கடந்த 2008-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். சாமி மலேசியாவில் வேலை பார்த்து வருவதால், அவ்வப்போது விடுமுறைக்கு சொந்த ஊரான தென்காசி மாவட்டம் கடையநல்லூருக்கு வந்து தன் மனைவி மற்றும் குழந்தைகளை பார்த்து சென்றுள்ளார்.

இதற்கிடையில் மனைவி ராஜேஸ்வரிக்கு புதுக்கோட்டையில் அரசு வேலை கிடைத்துள்ளது. அரசு வேலை கிடைத்ததையடுத்து ராஜேஸ்வரி மற்றும் இரு குழந்தைகளுடன் கணவர் சாமி புதுக்கோட்டையில் வாடகை வீடு எடுத்து அவர்களை குடியமர்த்தி விட்டு பணி காரணமாக மீண்டும் மலேசியா சென்று விட்டார்.

மலேசியாவி சம்பாதித்த பணத்தினை மனைவியின் அக்கவுண்ட்டிற்கு மாத, மாதம் சாமி போட்டு வந்துள்ளார். அதன் மூலம் ராஜேஸ்வரி நகைகள் எடுத்து வசதியாக வாழ்ந்து வந்துள்ளார்.

புதுக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் டைப்பிஸ்ட் வேலை பார்த்துவந்த ராஜேஸ்வரிக்கு பதவி உயர்வு கிடைத்து தற்பொழுது குடுமியான்மலையில் வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார்.

வருவாய் ஆய்வாளர் ராஜேஸ்வரிக்கும் புதுக்கோட்டையில் அவர் வீடு அருகே குடியிருந்து வரும் தாஸ் என்ற நபருக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்துள்ளது.

இது தெரியாமல் சாமி, சமீபத்தில் சொந்த ஊருக்கு திரும்பிய போது, தாஸ் உடன் அவரது மனைவி சேர்ந்து வாழ்ந்து வந்ததைக் கண்டு அ திர்ச்சியடைந்துள்ளார். சாமியுடன் அவர் சேர்ந்து வாழ மறுத்துவிட்டார்.

இதனால், சாமி புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணனிடம் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில், 12 வருடங்களாக சம்பாதித்த பணம் மற்றும் நகையை அபகரித்து தாஸ் என்பவர் வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்து வரும் என் மனைவி ராஜேஸ்வரி மற்றும் இரு குழந்தைகளையும் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்.

என் மனைவி மற்றும் குழந்தைகளையும் நகை மற்றும் பணத்தை மீட்டுத் தரவேண்டும் என்று கண்ணீர் மல்க புகார் அளித்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.