
ஹன்சிகாவுடன் காதல் முறிந்து விட்டது இனி நானும் தனிஆள்தான் என்று அறிக்கை விட்ட சிம்பு, ஹன்சிகாவுடன் நட்பு தொடர்வதாகவும், அவருடன் தொடர்ந்து நடிக்க விரும்புவதாகவும் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது..
நான் ஹன்சிகாவை மனதார காதலித்தது 100 சதவிகிதம் உண்மை. ஆனால் நாங்கள் காதலை அறிவித்த பிறகு நிறைய பிரச்சினைகள் துரத்தியது. இனிமேல் காதலை தொடர முடியாத அளவுக்கு அது முற்றியது.
காதலுக்கு சந்தோஷம்தான் முக்கியமே தவிர பிரச்சினைகள் அல்ல. அதனால் இருவரும் கலந்து பேசி பிரிந்து விட்டோம். ஆனாலும் நாங்கள் தொடர்ந்து நட்புடன் இருப்போம்.
எங்களுக்குள் எந்த சண்டையும் கிடையாது. காதல் பிரேக்அப் ஆனாலும் ஹன்சிகாவுடன் நடிப்பதில் எனக்கு எந்த தயக்கமும் கிடையாது. இப்போதுகூட ஐதராபாத்தில் வாலு படத்தில் சேர்ந்து நடித்துக் கொண்டுதான் இருக்கிறேன். இனி இருவரும் இணையும் வாய்ப்பு உண்டா என்பது பற்றி எனக்குத் தெரியாது என்று சிம்பு கூறியுள்ளார்.





