ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் மூன்றாவது போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் நேற்று மோதின.
நாணயச் சுழற்சியில் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பாகிஸ்தான் அணியை துடுப்பெடுத்தாட அழைத்தது.
அதன்படி துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 248 ஓட்டங்களைப் பெற்றது. உமர் அக்மல் 102 ஓட்டங்களையும் அஹமட் சஹீட் 50 ஓட்டங்களையும் பெற்றனர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 47.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 176 ஓட்டங்களைப் மாத்திரம் பெற்று 72 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
இப் போட்டியின் சிறப்பாட்டக்காரராக உமர் அக்மல் தெரிவுசெய்யப்பட்டார்.





