வவுனியாவில் தீவிர கண்காணிப்பில் பொலிசார்!!

1076

பொலிசார்…

விடுதலைப் புலிகளின் தலைவரின் பிறந்த நாள் மற்றும் மாவீரர் நாள் என்பவற்றை முன்னிட்டு வவுனியாவின் பல பகுதிகளிலும் பொலிசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

மாவீரர் வாரம் ஆரம்பிக்கப்பட்ட கடந்த 21 ஆம் திகதி முதல் வவுனியாவின் சில பகுதிகளில் பொலிசாரின் தீவிர கண்காணிப்பு காணப்பட்ட போதும், இன்று (26.11) குறித்த பகுதிகளில் மேலதிக பொலிசார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், கண்காணிப்பு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

அந்தவகையில் வவுனியாவில் சுழற்சி முறையில் போ ராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்ட இடம், நகரசபை பொங்கு தமிழ் நினைவுத் தூபி, தோணிக்கல் பகுதியில் சிவப்பு மஞ்சள் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள அரவிந்தன் என்பவரின் வர்த்தக நிலையத்திற்கு முன்,

ஆலயங்கள், ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தை அண்டிய பகுதிகள் என பரவலாக பொலிசாரின் பிரசன்னம் அதிகரித்துள்ளதுடன், அப் பகுதிகளுக்கு வந்து செல்வோர் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, வவுனியா தோணிக்கல் பகுதியில் கடமையில் உள்ள பொலிசார் மக்களுக்கு அச்சமூட்டும் வகையில் செயற்படுவதாகவும் பொதுமக்கபள் சிலர் குற்றம் சாட்டியுள்ளனர்.