
பாகிஸ்தான் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர் உமர் அக்மலுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரரான உமர் அக்மல், கடந்த 1ம் திகதி தனது சொந்த ஊரான லாகூரில் மார்க்கெட் பகுதியில் காரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது சிக்னலை மீறி சென்றதால், போக்குவரத்து பொலிசார் மடக்கி பிடித்தனர். பொலிசாருக்கும், உமர் அக்மலுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதில் பொலிஸ் வார்டனை அடித்ததாக கூறப்படுகிறது.
இதனைதொடர்ந்து உமர் அக்மலை கைது செய்த பொலிசார், மறுநாள் பிணையில் விடுவித்தனர். தன் மீதான குற்றச்சாட்டு உமர் அக்மல் மறுத்துவரும் நிலையில், பாகிஸ்தான் செசன்ஸ் நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.
மேலும், மார்ச் 11ம் திகதிக்குள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உமர் அக்மல் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்காக வங்கதேசம் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.





