இலங்கையில் கொரோனா தொற்றினால் மேலும் 8 பேர் பலி!!

943

கொரோனா

இலங்கையில் இன்றும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட எட்டு பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 107ஆக அதிகரித்துள்ளது.

உயிரிழந்தவர்களில் 4 ஆண்களும், 4 பெண்களும் அடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது. கொவிட் தொற்றினால் உயிரிழந்த அனைவரும் கொழும்பைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, இலங்கையில் இன்று இதுவரையில் 472 பேருக்கு கொவிட்-19 நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது. சற்றுமுன்னர் கிடைக்கப்பெற்ற பீ.சீ.ஆர் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் 211 பேருக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது.

இன்று நாள் முழுவதிலும் 472 பேருக்கு கொவிட் வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. இதேவேளை, இலங்கையில் இதுவரையில் மொத்தமாக 22500 பேருக்கு கொவிட்-19 நோய்த் தொற்று உறுதியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.