சூரிய குடும்பத்துக்கு வெளியே 715 புதிய கோள்கள் கண்டுபிடிப்பு!!

871

sunஅமெரிக்காவின் நாசா மையம் விண்வெளியில் ஆய்வு மேற்கொள்ள கெப்லர் செயற்கை கோளை அனுப்பியுள்ளது. அதில் பொருத்தப்பட்டுள்ள சக்தி வாய்ந்த டெலஸ்கோப் விண்ணில் புதைந்து கிடக்கும் அதிசயங்களை புகைப்படம் எடுத்து பூமிக்கு அனுப்பி வருகிறது.

இந்த வகையில் சமீபத்தில் கெப்லர் விண்கலம் 715 புதிய கோள்களை கண்டுபிடித்துள்ளது. அவை சூரிய குடும்பத்துக்கு வெளியே உள்ளன.

அவற்றில் 95 சதவீதம் கோள்கள், நெப்டியூன் கிரகத்தை விட சிறியதாக உள்ளன. அதே நேரத்தில் அவை பூமியை விட 4 மடங்கு பெரியதாகும். இந்த கோள்களை சுற்றி 305 நட்சத்திரங்கள் உள்ளன. அவை சூரிய குடும்பத்தில் இருப்பதை போன்ற அமைப்பில் உள்ளன.

கெப்லர் செயற்கை கோள்மூலம் சூரிய குடும்பத்துக்கு வெளியே இதுவரை 1700 கோள்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 4 புதிய கோள்கள் பூமியை விட 2½ மடங்கு பெரியதாக உள்ளன. அங்கு உயிரினங்கள் வாழக் கூடிய தட்ப வெப்ப நிலை நிலவுகிறது.