சிவனொளிபாத மலைக்கு செல்லும் வெளிநாட்டவர்களுக்கு 10 டொலர் கட்டணம் : அனைத்து சுற்றுலா கட்டணங்களும் அதிகரிப்பு!!

695

sivanoliநாடு முழுவதிலும் உள்ள தேசிய வனவிலங்கு பூங்காக்களை பார்வையிட செல்லும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடம் கட்டணங்களை அறவிடும் முறையை அறிமுகப்படுத்த வனஜீவராசிகள் வளத்துறை அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதனடிப்படையில் புதிய அனுமதிப்பத்திரங்களை வழங்கவும், வரி, வாகன கட்டணம் மற்றும் சேவை கட்டணங்களை உள்ளடக்கி உரிய தொகை ஒன்றை கட்டணமாக நிர்ணயிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

புதிய கட்டணங்களின் அடிப்படையில் யால தேசிய வனவிலங்கு சரணாலயத்திற்குள் பிரவேசிக்கும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் பத்து பேரை கொண்ட குழுவினருக்கு 3 ஆயிரம் ரூபா கட்டணமாக அறவிடப்பட உள்ளது.

பத்து மேற்படும் ஒரு நபருக்கு தலா 300 ரூபா கட்டணமாக அறிவிடுவது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை சிவனொளி பாத மலைக்கு செல்லும் வயது வந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு தலா 10 அமெரிக்க டொலர்கள் அறவிப்பட உள்ளதோடு, சிறுவர்களுக்கு 5 டொலர்கள் அறவிடப்பட உள்ளன.

இதனை தவிர சுற்றுலா விடுதிகளை முன்பதிவு செய்யும் கட்டணம் மற்றும் படகு சவாரி கட்டணம் என்பனவும் அதிகரிக்கப்பட்டுள்ளன.