வவுனியா நெடுங்கேணியில் வீதிப் பணியில் ஈடுபட்டிருந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி!!

894

கொரோனா..

வவுனியா நெடுங்கேணியில் வீதி அபிவிருத்தி பணியில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவருக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதினையடுத்து வீதி அபிவிருத்தி பணியில் ஈடுபட்டவர்களை தனிமைப்படுத்தப்பட்டு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன் போது 12 கொரோனா தொற்றாளர்கள் வரை இனங்காணப்பட்டு அவர்கள் தொற்று சிகிச்சை மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அதன் பின்னர் சுகாதார பிரிவினரின் முழுமையான முயற்சியினால் நெடுங்கேனி பகுதி சில நாட்கள் முடக்கப்பட்டு கொரோனா தொற்றினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மீண்டும் நெடுங்கேணி பகுதியில் வீதி அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

இதனையடுத்து சுகாதார பிரிவினர் அவர்களிடம் பி.சி.ஆர் பரிசோதனைகளை முன்னெடுத்த நிலையில் இன்றையதினம் (02.12.2020) வெளியான பி.சி.ஆர் பரிசோதனை முடிவில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றாளர் என முதலாவது அறிக்கை உறுதிப்படுத்தப்பட்டதனையடுத்து தற்போது மீண்டும் அந்த நபரிடம் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மீண்டும் நெடுங்கேணி பகுதி முடக்கப்படுமா என்ற அச்சம் அப்பகுதி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது