இலங்கையை அச்சுறுத்தும் கொரோனா : ஒரே நாளில் அதிகளவான தொற்றாளர்கள் கண்டுபிடிப்பு!!

875

கொரோனா..

கொழும்பு மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்ட முழுமையான கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளதாக கொரோனா தொற்றினை தடுக்கும் தேசிய செயற்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் மாத்திரம் கொழும்பில் 402 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதற்கமைய கொழும்பு மாவட்டத்தில் இதுவரை 10140 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை நேற்றைய தினம் கம்பஹா மாவட்டத்தில் 188 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதுவரையில் கம்பஹாவில் 6502 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கு மேலதிகமாக களுத்துறை மாவட்டத்தில் 106 பேரும் (98 பேர் அட்டலுகமவில்), கண்டியில் 27 பேரும், குருநாகலில் 24 பேரும், இரத்தினபுரியில் 52 பேரும், காலியில் 6 பேரும் கேகாலையில் 9 பேரும், நுவரெலியாவில் 18 பேரும், அம்பாறையில் 21 பேரும், கிளிநொச்சியில் 6 பேரும் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கு மேலதிகமாக வதிவிடத்தை உறுதி செய்ய முடியாத 88 பேரும் நேற்றைய தினம் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதற்கமைய இலங்கையில் ஒரே நாளில் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் நேற்றைய தினமே பதிவாகியுள்ளனர். அதன் எண்ணிக்கை 878 ஆகும்.