வவுனியாவில் மூன்று மணிநேரமாக ஒளிர்ந்து கொண்டிருந்த ரயில்வே சமிக்கைகள்!!

1462

ரயில்வே சமிக்கைகள்..

வவுனியா – மன்னார் வீதியிலுள்ள ரயில்வே கடவையில் சமிக்கைகள் இன்று (04.12.2020) காலை 5.00 மணி தொடக்கம் காலை 8.00 மணி வரை சுமார் மூன்று மணிநேரமாக தொடர்ச்சியாக இயங்கிக்கொண்டிருந்தமையினால் பொதுமக்கள் அச்சத்தினுடனே பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது.

கோவிட் -19 தொற்று தாக்கம் காரணமாக வடபகுதிக்கான ரயில்வே சேவைகள் நிறுத்தப்பட்டுள்ள போதிலும் குறித்த கடவையிலுள்ள ரயில்வே கடவையின் சமிச்சை மாத்திரம் திடீர் திடீரென தன்னியக்கமாக இயங்குவதினால் பொதுமக்கள் அச்சத்தின் மத்தியிலேயே ரயில்வே கடவையினை கடந்து சென்றிருந்தனர்.

சிவப்பு சமிக்கை மாத்திரம் விட்டு விட்டு ஒளிர்வதினால் அப்பாதையூடாக பயணித்த வாகனங்கள் அனைத்தும் அவ்விடத்தில் நின்று நின்று சென்றதினையும் அவதானிக்ககூடியதாகவிருந்தது.

மழையுடான காலப்பகுதியில் குறித்த கடவையின் சமிக்கைகள் இவ்வாறு இடம்பெறுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். மக்களின் நலனை கருத்தில் கொண்டு ரயில்வே திணைக்களத்தினர் உரிய நடவடிக்கையினை மேற்கொள்வார்களா?