கொரோனா…
கொவிட்-19 தொடர்பான ஏழு மரணங்கள் இன்றைய தினம் பதிவாகியுள்ளது. இதன்படி, நாட்டில் கொவிட் காரணமாக உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 137 ஆக உயர்வடைந்துள்ளது.
இன்றைய தினம் கொவிட் தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 669 என அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய தொற்று நோயியல் பிரிவு இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.
இலங்கையில் இதுவரை 27,228 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள நிலையில் 20,090 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளனர்.