மகாராஷ்டிரா மாநிலத்தில்…
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூர் உமரேட் பகுதியில் ஏரி உள்ளது. சம்பவத்தன்று மதிய நேரத்தில், அங்குள்ள ஏரிக்கு சந்திராப்பூர் பகுதியை சார்ந்த பிரவீன் மேஸ்ராம் (வயது 24) என்ற இளைஞன் நண்பர்களுடன் சென்றுள்ளார்.
அந்த சமயத்தில், எதிர்பாராத விதமாக பிரவீன் நிலைதடுமாறி பாலத்தின் மேலே இருந்து ஏரிக்குள் விழுந்துள்ளார். அவருடன் வந்த நண்பர்கள் பிரவீனை மீட்க முயற்சி செய்தும் பலனளிக்கவில்லை.
இதனால் அவர் தண்ணீரில் மூழ்கி மா யமாகியுள்ளார். இதனையடுத்து இது குறித்து காவல் துறையினர் மற்றும் மீ ட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கவே,
சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் அவரின் உடலை மீ ட்டனர். இரண்டு நாட்கள் தேடலுக்கு பின்னர், ஏரியில் இருந்து பிரவீனின் உடலை பிணமாக மீட்டுள்ளனர்.
இந்த விடயம் தொடர்பாக காவல் துறையினர் வி சாரணை செய்து வருகின்றனர். மேலும், பிரவீன் செல்பி எடுக்க முயற்சி செய்ததாக வி சாரணையில் தெரியவந்துள்ளது.