கோடிக்கணக்கில் பணம் இருந்தும் திருமணத்திற்கு அம்மா கட்டிய சேலையுடன் வந்த இளம் நடிகை!!

4317

நடிகை நிஹாரிகா..

32 வருடங்களுக்கு முன் தனது அம்மா நிச்சயதார்த்த தினத்தன்று அணிந்த சேலையை நடிகை நிஹாரிகா தனது திருமண நிச்சயதார்த்தத்திற்கு அணிந்து சமூகவாசிகளின் கவனத்தினை ஈர்த்துள்ளார்.

தமிழ், தெலுங்கு திரைப்படத்திலும் நடித்துள்ள நிஹாரிகாவுக்கும் பொறியாளர் சைதன்யாவுக்கும் கடந்த ஆகஸ்ட் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

தற்போது திருமணத்திற்கு முந்தைய சடங்குகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இது குறித்த புகைப்படங்களை அவர் இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

32 வருடங்களுக்கு முன் தனது தாயார் பத்மஜா நிச்சயதார்த்தத்தின் போது எடுக்கப்பட்ட இந்த சேலை இப்பொழுதும் அழகாக இருப்பதாக அவர் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

நிச்சயதார்த்தத்தின்போது தாயார் சேலை அணிந்த புகைப்படமும் தற்போது நிகாரிகா அதே சேலை அணிந்த புகைப்படத்தையும் அவர் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன.