கோர விபத்தில் இருவர் உயிரிழப்பு!!

1552

கோர விபத்தில்…

திருகோணமலை – கந்தளாய் பிரதான வீதியின், ஜயபுர பகுதியில் சீமெந்து ஏற்றிச் சென்ற லொறியும், முச்சக்கரவண்டியும் மோதி விபத்திற்கு இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதுடன், இதன்போது முச்சக்கரவண்டியில் பயணித்த இருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் திவுலபிடிய, படேபொல பகுதியைச் சேர்ந்த கே.நதீகசம்பத்குமார (38 வயது) மற்றும் புத்தளம் – முந்தலம பகுதியைச் சேர்ந்த விஜயசிங்க ஆராய்ச்சிலாகே இஷான் சமிந்த (35 வயது) ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை லொறியின் சாரதியான ஊறுவத்த, கதன்ஹேனவத்த பகுதியைச் சேர்ந்த பத்தினிகே பியனந்த (58 வயது) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை இன்று கந்தளாய் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் கந்தளாய் வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேதப் பரிசோதனை முடிவடைந்த பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்க உள்ளதாகவும், விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.