ஈழத்தமிழ் அகதிகள் 4 பேர் புழல் சிறைக்கு மாற்றம்!!

559

jailஇலங்கைத் தமிழ் அகதிகள் நான்கு பேர் திருச்சி சிறப்பு முகாமிலிருந்து சென்னை புழல் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

கடந்த புதன்கிழமை திருச்சி சிறப்பு முகாமில் அரச அதிகாரிகளை துஸ்பிரயோகத்திற்கும் அச்சுறுத்தல்களுக்கும் உள்ளாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டு, இலங்கைத் தமிழர்கள் நான்கு பேரும் கைது செய்யப்பட்டனர்.

உதயாஸ், பகீரதன், கங்காதரன் மற்றும் நேரு என்கிற ஈழ நேரு ஆகியோரே கைது செய்யப்பட்டு பொலிஸாரின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் புழல் சிறைக்கு அழைத்து வரப்பட்டனர்.

சிறப்பு முகாமிற்கு வருகை தந்திருந்த நைஜீரிய தூதரக அதிகாரிகளை உள்ளே வைத்து பூட்டியதாக கே.கே நபர் பொலிஸாரால் குறித்த நான்கு தமிழர்களும் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில், நான்கு பேரையும் மார்ச் 12 வரை காவலில் வைக்குமாறு, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.