வவுனியா நகரசபைக்குட்பட்ட மக்களுக்கு நகரசபையின் விசேட வரப்பிரசாதம்!!

1265

நகரசபைக்குட்பட்ட மக்களுக்கு…

வவுனியா நகரசபைக்குட்பட்ட பகுதியில் 2009ம் ஆண்டிற்கு முன்னர் பிரிக்கப்பட்ட காணித்துண்டுகள் 6 பேர்ச்சுக்கு குறைவாக காணப்படின் அவர்களும் நகரசபையின் வரப்பிரசாதங்களை பெற்றுக்கொள்ள முடியுமென வவுனியா நகரசபையினர் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு நகர அபிவிருத்தி அதிகாரசபையினரிடம் வவுனியா நகரசபையால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கிணங்க கொழும்பு நகர அபிவிருத்தி அதிகாரசபையினரினரின் அனுமதியினை பெற்று வவுனியா நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் 2009 ஆம் ஆண்டுக்கு முன்பாகவே,

முறையாக நகரசபையின் அனுமதியின்றி பிரிவிடுகைக்குட்ட காணித் துண்டங்களை ஏற்கனவே பிரிக்கப்பட்டுள்ள காணித் துண்டங்கள் என்று கருதி அக்காணித் துண்டங்களில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி செயற்பாடுளுக்கு அனுமதி வழங்குவது என நகரசபையால் தீர்மானிக்கப்பட்டுள்ளது

வவுனியா நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் 2009 ஆம் ஆண்டுக்கு முன்பாகவே முறையாக நகரசபையின் அனுமதியின்றி பிரிவிடுகைக்குட்ட காணித் துண்டங்களை ஏற்கனவே பிரிக்கப்பட்டுள்ள காணித்துண்டங்கள் என்று கருதி அக்காணித்துண்டங்களில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி செயற்பாடுளுக்கு அனுமதி வழங்குவது என நகரசபையால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஆதன உரிமையாளர்கள் தமது ஆதனங்கள் 2009 ஆம் ஆண்டுக்கு முன்பாகவே பிரிக்கப்பட்ட காணித் துண்டங்கள் என்று நகரசபை திருப்திப்படும் ஆவணங்களின் மூலம் உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் அவை 06 பேர்ச்சுக்கு குறைவாக இருப்பினும் தமது ஆதனங்களுக்கான ஆதனப் பெயர் மாற்றங்களை மேற்கொள்ளலாம் என்பதுடன்,

2009 ஆம் ஆண்டுக்கு முன்பாக பிரிக்கப்பட்ட காணித்துண்டங்களுக்கான நில அளவை வரைபட அனுமதி மற்றும் கட்டட அனுமதி நகர அபிவிருத்தி அதிகாரசபையின் விதிமுறைகளுக்கு அமையவே பரிசீலிக்கப்படும்

மேலும் இத் தீர்மானங்கள் அனைத்தும் தனியார் காணிகளுக்கும் நீண்ட கால குத்தகையில் பொது மக்களுக்கு வழங்கப்படவுள்ள அரச காணிகளுக்கு மட்டும் பொருத்தப்பாடுடையதாகும் என்பதுடன் இவ்விடயம் தொடர்பிலான மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள வவுனியா நகரசபைக்கு விஜயம் மேற்கொள்ளுமாறும் நகரசபையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.