லண்டனில் மாஸ்க், சானிடைசர் அணியாவிட்டால் மற்றும் பிறர் வீட்டிற்கு சென்றால் அபராதம் என கட்டுப்பாடு உள்ளது என பிரபல மொடல் மற்றும் நியூட்ரிஷன் அனுஷா நாயர் கூறியுள்ளார்.
லண்டன் உணவு நிறுவனம் ஒன்றில் நியூட்ரிஷனாக வேலை செய்த அனுஷா கூறுகையில், நான் பிறந்தது கேரளா, வளர்ந்தது கன்னியாகுமரி, கிளினிக்கல் நியூட்ரிஷன் படித்த பின் பிஎச்.டி., படிக்க நினைத்த போது லண்டன் உணவு நிறுவனம் ஒன்றில் நியூட்ரிஷன் வேலை கிடைத்தது.
இப்போது லண்டன் அரசு மருத்துவமனையில் சேர பயிற்சி பெறுகிறேன். 7 ஆண்டு லண்டன் வாழ்க்கை நன்றாக தான் இருக்கிறது.
நடிக்க வாய்ப்பு வந்தும் ஆர்வமில்லை. லண்டன் தமிழர்கள் எடுத்த 2 குறும்படங்களில் நடித்து அவர்களுடன் பணியாற்றினேன். இங்குள்ள மேக்கப் ஆர்டிஸ்ட் தங்கள் திறமையை காட்ட சினிமா ஹீரோயின் மேக்கப் செய்வாங்க.
மாடலிங்கில் பல வகை இருக்கு. நான் பிரின்ட் மாடல் தான். போட்டோ ஷூட் பப்ளிஷ் பண்றதோட சரி. பேஷன் ஷோ, ரேம்ப் வாக் போறதில்லை.
அம்மா, அப்பா நினைவுகள் நெருங்கும். கொரோனா ஊரடங்கில் ஊருக்கு வரவே முடியலை. சொந்த ஊரில் வேலை செய்யும் திருப்தி இங்கு இல்லை.
பள்ளி, கல்லுாரிகள் திறந்ததால் கொரோனா இரண்டாம் அலை வந்து விட்டது. மாஸ்க், சானிடைசர் அணியாவிட்டால், பிறர் வீட்டிற்கு சென்றால் அபராதம் என கட்டுப்பாடு உள்ளது.
பலர் வீட்டில் இருந்து தான் வேலை செய்றாங்க. நம்மூரின் மருத்துவ குணமுள்ள மஞ்சளை இங்கு மாத்திரையாக சாப்பிடுறாங்க. நான் சமையலில் மஞ்சள் அதிகம் சேர்க்கிறேன் என கூறியுள்ளார்.