தீயில் எரிந்த பெண்..
வவுனியா- ஓமந்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சேமமடு பகுதியில் தீயில் எரிந்து படுகாயமடைந்த பெண் ஒருவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் இரு தினங்களுக்கு முன்னர் தனது வீட்டில் இருந்த சமயம் தீயில் எரிவதை அவதானித்த அயலவர்கள் அவரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்ததுடன், பொலிஸாருக்கும் தெரியப்படுத்தியுள்ளனர்.
சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த செல்வரஞ்சனி (வயது 41 என்ற பெண்ணே படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் நேற்று காலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவரது மரணம் தொடர்பாக ஓமந்தை பொலிஸாரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.