டெங்கு விழிப்புணர்வு…
வவுனியா வைரவப்புளியங்குளம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட பொதுமக்களுக்கான டெங்கு விழிப்புணர்வு கருத்தமர்வு வைரவப்புளியங்குளம் கிராம அலுவலகர் காரியாலயத்தில் இன்று(09.12.2020) இடம்பெற்றது.
வைரவப்புளியங்குளம் கிராம அலுவலகர் க.விஜயகுமார் தலைமையில் இடம்பெற்ற டெங்கு விழிப்புணர்வு கருத்தமர்வில் மாவட்ட பொது சுகாதாரப் பரிசோதகர் க.தியாகலிங்கம், பொது சுகாதார பரிசோதகர் வோல்டயன், அரச அதிகாரிகள் மற்றும் கிராம பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் , கிராம மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது டெங்கு நுளம்பு எவ்வாறு பரவுகின்றது, அதன் தாக்கம், தடுப்பது எவ்வாறு, டெங்கு நுளம்புகள் பரவும் இடங்களை இனங்காண்பது எவ்வாறு, டெங்கு தொடர்பாக சமூகத்தின் பொறுப்பு போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் பொதுமக்களுக்கு விளக்கம் வழங்கப்பட்டது.