சிறுவர்கள் தொடர்பில்..
கொரோனா வைரஸ் தொற்றினை தொடர்ந்து சிறு பிள்ளைகள் தொடர்பில் பெற்றோர் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என தொற்று நோய் விஞ்ஞான பிரிவின் பிரதானி வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
சிறுபிள்ளைகள் உணவு உட்கொள்ளளும் முறையில் மாற்றம், அவர்கள் பதிலளிக்கும் முறையில் மாற்றம் உள்ளதாக என ஆராயுமாறு அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் தீவிர அவதானம் செலுத்துமாறு அவர் பெற்றோர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
வைத்தியசாலைகளில் கொரோனா தொற்றும் என்ற அச்சத்தில் சிகிச்சை பெற வராமல், நோய் அதிகரிப்பதற்கு இடமளிக்க வேண்டாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.