வவுனியா சிவபுரம் கிராமத்தில் தேசிய வீட்டுத்தோட்ட செயற்றிட்டம் ஆரம்பித்து வைப்பு!!

2154

வீட்டுத்தோட்ட செயற்றிட்டம்…

வவுனியா செக்கட்டிப்புலவு கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட சிவபுரம் கிராமத்தில் தேசிய வீட்டுத் தோட்டச் செயற்றிட்டத்தின் கீழ் கன்றுகள், விதைகள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

குறித்த நிகழ்வு செக்கட்டிப்புலவு கிராம சேவையாளர் சு.கிருசிகா தலைமையில் சிவபுரம் கிராமத்தில் வீட்டுத்தோட்டம் மூலம் பயனடைந்த பயனாளி ஒருவரின் வீட்டில் இன்று காலை நடைபெற்றிருந்தது.

வீட்டுப் பொருளாதாரம், போசனையை மேம்படுத்தி குடும்ப அலகுகளை வலுவூட்டும் தேசிய வீட்டுத் தோட்ட செயற்றிட்டத்தின் கீழ் சிவபுரம், ஹிஜ்ராபுரம், புதிய கோவில்குளம், செல்வாநகர் ஆகிய கிராமங்களில் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு புடோல், புசிட்டா, பாகல், கீரை போன்ற விதைகளும் கத்தரி, தக்காளி, மிளகாய் போன்ற கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டன.

இந் நிகழ்வில் அபிவிருத்தி உத்தியோகத்தர் தி.சுதர்சினி, சமூர்த்தி உத்தியோகத்தர் து.கீர்த்திசிங்கம், பட்டதாரி பயிலுனர்கள், பொது சுகாதார பரிசோதகர் ஜோ.ரோய் , குடும்ப நில உத்தியோகத்தர் ரொசிற்றா என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.