விபத்து..
ஹொரவபொத்தானை – வவுனியா பிரதான வீதியில் டிப்பர் வாகனமும், மோட்டார் சைக்கிளும் மோதி இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் இன்று (11.12.2020) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் ஹொரவ்பொத்தானை பிரதேச செயலகத்தில்,
விவசாய உற்பத்தி ஆராய்ச்சி உதவியாளராக கடமையாற்றும் ஹொரவ்பொத்தானை – ரிட்டிகஹவெவ பகுதியை சேர்ந்த எம்.அனுலா குமாரி (56 வயது) என்பவரே உயிரிழந்துள்ளார்.
பேருந்தொன்று நிறுத்தப்பட்டிருந்த நிலையில் அதன் பின்னால் வந்த டிப்பர் வாகனம் முந்திச் செல்ல முற்பட்ட நிலையில் மோட்டார் சைக்கிளில் சென்ற கணவன் மற்றும் மனைவி டிப்பர் வாகனத்தில் சிக்கி பேருந்து சில்லுக்குள் சிக்குண்டுள்ளதாக தெரியவருகின்றது.
சம்பவத்தில் மனைவி உயிரிழந்த நிலையில், கணவர் சிறு காயங்களுடன் ஹொரவபொத்தான பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்த பெண்ணின் சடலம் தற்போது ஹொரவபொத்தான பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பில் டிப்பர் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.