மரங்கள் நாட்டும் செயற்றிட்டம்..
வவுனியா செட்டிக்குளம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 7 குளங்களின் கீழ் 10 000 மரங்கள் நாட்டும் செயற்றிட்டத்தின் முதற்கட்ட நடவடிக்கை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதன் முதற்கட்டமாக இன்றையதினம் (12.12.2020) காலை வீரபுரம் கல்வீரங்குளம் குளத்தின் கீழ் 350க்கு மேற்பட்ட மரங்கள் நாட்டி வைக்கப்பட்டன.
குளத்து நீர் ஆவியாவதை தடுத்தல், குளச் சூழலை பாதுகாத்தல், நிலக்கீழ் நீரை சேமித்தல், குளக்கக்கட்டினை பாதுகாத்தல் என்பவற்றினை நோக்கமாக கொண்டு பசுமை காலநிலை நிதியம் மற்றும் நீர்பாசன அமைச்சின் நிதி பங்களிப்புடன் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் தொழில்நுட்ப ஆலோசனையுடன், பாம் நிறுவனத்தின் சமூக அணித்திறட்டல் செயற்பாட்டினால் இத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந் நிகழ்வில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர்சமன் பந்துலசேன, உதவி திட்டப்பணிப்பாளர் கெனிசியஸ், செட்டிகுளம் பிரதேச செயலாளர் சிவகரன், பாம் நிறுவன பணிப்பாளர் சுனில் தொம்பேபொல, அரச உத்தியோகஸ்தர்கள், கமநல அமைப்பு தலைவர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
தொடர்ச்சியாக ஒரு வாரம் இடம்பெறவுள்ள இம் மரநடுகை திட்டமானது அடப்பங்குளம், முதலியார்குளம், மாங்குளம், வீரபுரம், துட்டுவாகை, கலேசியம்பலாவெவ குளங்களின் கீழ் இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வு 18ம் திகதிவரை நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.