397 வருடங்களின் பின்னர் நடக்கும் அதிசயம் : இலங்கையர்களுக்கும் காணும் வாய்ப்பு!!

10556

அதிசயம்..

அண்டவெளியில் ஏற்படும் அரிய நிகழ்வை இன்று முதல் இலங்கை மக்கள் அவதானிக்க சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாக ஆத்தர் சி கிளார்க் நிலையம் தெரிவித்துள்ளது.

ஜெமினிட் எனப்படும் விண்கல் மழை இன்று முதல் 3 நாட்கள் பொழியும் என கூறப்படுகின்றது. தெளிவான வானம் காணப்பட்டால் இந்த விண்கல் பொழிவை தெளிவாக பார்க்க முடியும் என ஆத்தர் சி கிளார்க் நிலையத்தின் சிரேஷ் நட்சத்திர ஆய்வு விஞ்ஞானி இந்திக்க மெதகன்டோ தெரிவித்துள்ளார்.

இந்த நாட்களில் நிலவில்லாத வானம் இருப்பதால் விண்கல் மழை பொழிவை வெற்றுக் கண்களால் தெளிவாகவும் எளிதாகவும் பார்க்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் 21 ஆம் திகதி, வியாழன் மற்றும் சனி ஆகிய இரு கிரகங்களும் மிக நெருக்கமாக அமையும் மிக அரிதான நிகழ்வு ஒன்று நடக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான நிகழ்வு 397 வருடங்களின் பின்னர் முதல் முறையாக நிகழ்வதனை பார்க்கலாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.