ஊரடங்கு சட்டம்..
நாட்டில் மீண்டும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்த தீர்மானிக்கவில்லை என இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அடுத்து வரும் வாரமளவில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படலாம் என தகவல்கள் வெளியாகி இருந்தன. எனினும் அவ்வாறான எந்தவொரு நிலைப்பாடும் இல்லை என இன்று காலை தொலைக்காட்சி ஒன்றிற்கு வழங்கிய செவ்வியில் இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்.
அடுத்து வரும் 10 நாட்டில் எந்த முறையில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை மாற்றமடைகிறது என அவதானிக்கப்படும். நாங்கள் கொழும்பு நகர சபை எல்லையை ஒரு அளவிற்கு கட்டுப்பாட்டிற்குள்ள கொண்டு வந்துள்ளோம்.
எனினும் தற்போது உள்ள நிலைமைக்கமைய ஒரு போதும் தனிமைப்படுத்தல் அல்லது ஊரடங்கு சட்டம் அமுல்படுத்துவதற்கு எதிர்பார்ப்பில்லை.
நாட்டு மக்கள் இரண்டு நிலைப்பாட்டை கொண்டிருக்கின்றனர். ஒரு தரப்பினர் நாட்டை மூடிவிடுங்கள் மக்களின் செயற்பாடு சரியில்லை என கூறுகின்றார்கள். மற்றுமொரு தரப்பினர் தற்போது தான் பணம் சம்பாதிக்க சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
இப்படியே நாடு இருக்கட்டும் என கூறுகின்றார்கள். எப்படியிருப்பினும் மக்களின் நன்மையான பக்கம் குறித்தே சிந்திக்க வேண்டும் என இராணுவ தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.
-தமிழ்வின்-