யாழ்ப்பாணத்தில் இன்று பலருக்கு கொரோனா தொற்று உறுதி!!

1175

யாழ்ப்பாணத்தில்..

மருதனார்மடத்தில் நேற்றைய தினம் தொற்று உறுதி செய்யப்பட்டவரின் மனைவி மூன்று பிள்ளைகள் மற்றும் இரண்டு உறவினர்கள் உட்பட ஆறு பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ் போதனா வைத்தியசாலையின் ஆய்வு கூட பரிசோதனையில் இவ்வாறு தொற்று உறுதியானது என பணிப்பாளர் தெரிவித்தார்.

மருதனார்மடம் சந்தை வியாபாரிகளிடம் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பிசிஆர் பரிசோதனையில் 31 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று உறுதிப்படுத்தப்பட்டது என முன்னர் தகவல் வெளியாகியிருந்தது

அதில் மருதனார்மட சந்தை வியாபாரிகள் 24 பேர், நேற்று பாதிக்கப்பட்டவரின் உறவினர்கள் 7 பேர் தொற்றுக்குள்ளதான அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.