வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் விசேட கொரோனா தொற்று நீக்கும் நடவடிக்கை!!

752

தொற்று நீக்கும் நடவடிக்கை..

நாடளாவிய ரீதியில் கோவிட் -19 தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில் வவுனியாவில் அதனை கட்டுப்படுத்தும் முகமாக வவுனியா நகரசபையினரினால் தொற்று நீக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதனையடுத்து பொதுமக்கள் அதிகளவில் வருகை தரும் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை வவுனியா நகரசபை தவிசாளரின் ஆலோசனைக்கமைய இன்று (13.12.2020) காலை 9.00 மணியளவில் தொற்று நீக்கம் செய்யப்பட்டது.

நகரசபை பொது முகாமைத்துவ உதவியாளர் துரைராஜ் சபேசன் தலைமையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு, நடைபாதைகள், விடுதிகள் என்பன நகரசபையின் தீயணைப்பு பிரிவினரின் உதவியுடன் தண்ணீர் மூலம் சுத்தப்படுத்தியதுடன் மருந்தும் வீசியும் தொற்று நீக்கம் செய்யப்பட்டது.