மூடப்படும் பாடசாலை..
வவுனியா சாளம்பைக்குளம் அல் அக் ஷா முஸ்ஸிம் பாடசாலை சுகாதார பிரிவினரின் ஆலோசனைக்கமைய மூடப்பட்டுள்ளது.
வவுனியா புதிய சாலம்பைக்குளத்தினை சேர்ந்த தாயும் பிள்ளையும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வவுனியாவிருந்து கொழும்பு சென்று வந்த நிலையில் தனிமைப்படுத்தப்பட்டு பி.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தாயுக்கும் பிள்ளைக்கும் கோவிட் -19 தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து புதிய சாலம்பைக்குளம் கிராமம் நேற்று (12.12) முதல் சுகாதார பிரிவினரினால் முடக்கப்பட்டு அப்பகுதி மக்கள் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சுகாதார பிரிவினரின் ஆலோசனைக்கமைய வவுனியா சாளம்பைக்குளம் அல் அக் ஷா முஸ்ஸிம் பாடசாலை எதிர்வரும் 16ம் திகதி வரை மூடப்பட்டுள்ளது.