கொரோனா..
இரத்தினபுரியில் வெளிநாடு செல்லவிருந்த நபர் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளார். ரக்வான – உக்வத்தை பிரதேசத்தில் கடந்த 29ஆம் திகதி இடம்பெற்ற திருமணமான இளைஞருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
திருமணத்தின் பின் வெளிநாடு செல்வதற்காக மேற்கொண்ட PCR பரிசோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டமை உறுதியாகியுள்ளது. இதன் காரணமாக உக்வத்தை பிரதேசத்தில் 13 குடும்பத்தை சேர்ந்த 70 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அதில் 10 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் நால்வர் கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது. அவர்களில் மணமகள் மற்றும் 16 வயதுடைய பாடசாலை மாணவியும் உள்ளடங்குவதாக குறிப்பிடப்படுகின்றது.
இதன் காரணமாக உக்வத்தை பிரதேசத்திற்கு பயணக்கட்டுப்பாடு விதிப்பதற்கு கொடகவெல பிரதேச சபை தலைவர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.