
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் நேற்று நடைபெற்ற போட்டியில் வங்கதேச அணியை, ஆப்கானிஸ்தான் 32 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
படுல்லா நகரில் நடந்த இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற வங்கதேச அணி ஆப்கானிஸ்தானை பந்துவீச அழைத்தது.
இதையடுத்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான், 50 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 254 ரன்களை எடுத்தது. அவ் அணியின் அஸ்கர் ச்டநிக்சி 90 ஓட்டங்களையும், சமயுல்லாஹ் ஷேன்வரி 81 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
தொடர்ந்து 255 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி, 47.5 ஓவரில் 222 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 32 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
இதுவரை 4 சர்வதேச போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள ஆப்கானிஸ்தான் அணி இவ் வெற்றியின் மூலம் கிரிக்கெட் உலகை தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. ஆப்கானிஸ்தான் அணி ஆசியாவின் பலம் பொருந்திய அணியாக உருவாகும் என்பதில் சந்தேகமில்லை.





