ஐநா மனித உரிமைகள் பேரவை கூட்டத் தொடர் நாளை ஆரம்பம்!!

750

Human Rights Council

ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் பேரவையின் 25வது கூட்டத் தொடர் நாளை ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ளது. இந்த கூட்டத் தொடரின்போது இலங்கை தொடர்பில் முக்கிய தீர்மானம் முன்வைக்கப்படவுள்ளது.

மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை மற்றும் அமெரிக்கா, பிரித்தானியா, கனடா ஆகிய நாடுகள் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை முன்வைத்து நிறைவேற்றுவதற்கு தயாராகியுள்ளன.

பிரித்தானிய வெளிநாட்டுச் செயலாளர் விலியம் ஹெக் மற்றும் அரச அலுவல்கள் அமைச்சர் ஹியுகோ ஷ்வீயர், கனடாவின் வெளிவிவகார அமைச்சர் ஜோன் பர்டி மற்றும் அரச அலுவல்கள் அமைச்சர் லின் யெலிட் செய்வாரய ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளனர்.

ஜெனீவா கூட்டத் தொடரில் கலந்து கொள்ளவுள்ள இலங்கை குழுவினர் புறப்பட்டுச் சென்றுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.