விபத்து…
வவுனியா – செட்டிக்குளம் பிரதான வீதியூடாக மின்சார தூண்களை ஏற்றிச் சென்ற வாகனம் இன்று (15.12.2020) காலை உலுக்குளம் பகுதியில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.
மின்சார தூண்களை ஏற்றிக் கொண்டு வவுனியா – செட்டிக்குளம் பிரதான வீதியூடாக பயணித்துக்கொண்டிருந்த வாகனம் உலுக்குளம் பகுதியில் வீதி திருத்தும் பணிகளுக்காக வெட்டப்பட்ட பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.
வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்த வாகனத்தை மீட்கும் நடவடிக்கையில் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.