என் திறமையை பயன்படுத்தாத இயக்குனர்கள் : விதார்த் அலப்பறை!!

434

Vitharth

ஒன்றிரண்டு பேரை தவிர மற்ற இயக்குனர்கள் என்னை முழுமையாக பயன்படுத்திக்கொள்ளவில்லை என்றார் விதார்த்.

ஹிந்தியில் வெளியாகி ஹிட்டான ஆமிர் என்ற படம் தமிழில் ஆள் என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. ஆனந்த் கிருஷ்ணா இயக்குகிறார். விதார்த் நாயகன். கார்த்திகா நாயகி. ஜோஹன் இசை. ஜே.எஸ்.சதீஷ்குமார் வழங்க விடியல் ராஜு தயாரிக்கிறார்.

என்.எஸ்.உதயகுமார் ஒளிப்பதிவு. இப்படத்தில் நடிப்பது பற்றி விதார்த் கூறியதாவது, மைனாவில் பிரபு சாலமன் என்னை முழுமையாக பயன்படுத்தினார். அதன்பிறகு இப்பட இயக்குனர்தான் என்னை முழுமையாக பயன்படுத்தி இருக்கிறார்.

மர்ம நபரால் மிரட்டப்பட்டு அவன் சொல்லுக்கு கட்டுப்பட்டு ஒரு வேலையை முடிக்கும் கதாபாத்திரம். சென்னை முழுவதையும் நடந்தும், ஓடியுமே நடித்திருக்கிறேன். பஸ் ஸ்டாண்ட், ரயில் நிலையம், ஏர்போர்ட் என மக்கள் நெரிசல் மிகுந்த பகுதிகளில் 3 கேமராக்களை மறைத்து வைத்துவிட்டு ஷூட்டிங் நடத்தப்பட்டது.

தெருவில் நடந்துபோனவர்கள் கூட காட்சிகளில் பதிவாகி இருக்கிறார்கள். கோட் சூட் அணிந்து நடித்திருக்கிறேன். இப்படத்தின் போட்டோ செஷன் நடந்ததும் அதை வீரம் பட ஷூட்டிங்கில் இருந்த அஜீத்திடம் காட்டினேன்.

ரொம்ப ஸ்டைலா இருக்கீங்க என்று பாராட்டி, எனக்கு கோட், சூட் போட்டு அழகுபார்த்தார். இவ்வாறு விதார்த் கூறினார்.