பெக்கோ இயந்திரம்..
வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெலிஓயா – ஆக்ரோயா பகுதியில் அமைந்துள்ள தனியார் கல்குவாரி ஒன்றில் இடம்பெற்ற பெக்கோ இயந்திர விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் இன்று மதியம் கல்குவாரி வளாகத்திலேயே இடம்பெற்றுள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர் பெக்கோ இயந்திரத்தை செலுத்துகையில் அதன் கட்டுப்பாட்டை இழந்து 20 அடி பள்ளத்தில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதனையடுத்து, குறித்த சாரதியை மீட்டு, உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
இவ்வாறு உயிரிழந்தவர், மஸ்கெலியா கோர்த்தி பகுதியை சேர்ந்த மொஹமட் அலீம் (வயது – 36) ஒரு பிள்ளையின் தந்தை என பொலிஸாரின் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளன.
உயிரிழந்தவரின் சடலம் வட்டவளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு அனுப்பப்படும் என தகவல்கள் தெரியவந்துள்ளன.
இவ்விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை வட்டவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.