மஹிந்த ராஜபக்ஷ..
மக்களிடமிருந்து சுரண்டும் செயற்பாடுகளை வர்த்தகர்கள் முழுமையாக நிறுத்த வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அதற்கமைய நுகர்வோர் அதிகார சபையினால் தீவிர சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நுகர்வோர் அதிகார சபையின் உத்தரவினை கருத்திற்கொள்ளாமல் வர்த்தகர்கள் தாங்கள் நினைப்பதனை போன்று பொருட்களை விற்பனை செய்தவாக முறைப்பாடு கிடைத்துள்ளமை அடுத்து பிரதமரின் இதனை தெரிவித்துள்ளார்.
எந்தவொரு பற்றாக்குறையும் இன்றி மக்களுக்கு மிகவும் சலுகை விலையில் உணவுப் பொருட்களை வழங்குமாறு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ அறவுறுத்தியிருந்தார். அதற்கமைய சதொச நிறுவனம் செயற்பட்டு வருவதாக பிரதமர் குறிப்பிட்டார்.
சட்டவிரோத இலாபம் ஈட்டாமல் மக்களுக்கு சலுகை விலையில் உணவுப் பொருட்களை விற்க வேண்டும் என்றும், அதிக விலைக்கு பொருட்களை விற்பவர்கள் மன்னிக்கப்பட மாட்டார்கள் என்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ எச்சரிக்கை விடுத்துள்ளார்.