ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள்..
கொழும்பில் கொரோனா தொற்றுக்குள்ளான பெண்ணொருவர் நான்கு குழந்தைகளை பிரசவித்துள்ளார். கொழும்பு டி சொய்ஸா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணி பெண் ஒருவர் நான்கு குழந்தைகளை பிரசவித்துள்ளதாக வைத்தியசாலை இயக்குனர் தெரிவித்துள்ளாளர்.
மருதானை, குப்பியாவத்தை பிரதேசத்தை சேர்ந்த 29 வயதான பெண்ணுக்கே இந்த குழந்தைகள் பிறந்துள்ளன. தாயும் குழந்தைகளும் ஆரோக்கியமாக உள்ளதாக இயக்குனர் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னர் இரண்டு சந்தர்ப்பங்களில் இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான தாய்மார்கள் இரட்டை குழந்தைகள் பெற்றிருந்த போதிலும் ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள் பெற்றமை இதுவே முதல் சந்தர்ப்பதாகும்.
இந்த பிரசவத்தின் போது இரண்டு ஆண் குழந்தைகளும் இரண்டு பெண் குழந்தைகளும் பிறந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.