இலங்கையில் அதிகரித்து வரும் அபாய நிலை : முழு நாடும் மீண்டும் முடக்கப்படலாம் என தகவல்!!

1831

கொரோனா தொற்று..

நாட்டில் கொரோனா தொற்று அபாய நிலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் மக்கள் பொறுப்பின்றி செயற்பட்டால் மீண்டும் நாடு முழுவதையும் முடக்க வேண்டிய நிலைமை ஏற்படலாம் என்று அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.

எதிர்வரும் நாட்களில் இந்த நிலை நீடித்தால் குறிப்பாக கடுமையான நடமாட்டக் கட்டுப்பாடுகள் விதிக்க நேரும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செய்தி தொடர்பாளர் வைத்தியர் ஹரித அளுத்கே தெரிவித்துள்ளார்.

இதே போன்ற கருத்தை கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனா தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும், இராணுவத் தளபதியுமான ஷவேந்திர சில்வா ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்துள்ள முழுமையான விபரத்தை கீழுள்ள செய்தியில் படியுங்கள்..

அடுத்த ஏழு நாட்கள் மக்களின் நடவடிக்கையை பொறுத்தே நாட்டை முடக்குவது தொடர்பில் தீர்மானம்!!

நீண்ட நத்தார் வார இறுதியில் மேற்கு மாகாணத்தில் நுழையவோ அல்லது வெளியேறவோ, மாகாணத்திற்குள் ஊரடங்கு உத்தரவினையோ அல்லது முடக்கலை விதிக்கவோ, பயணக்கட்டுப்பாடுகளை விதிக்கவோ விரும்பவில்லை என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

கொரோனா தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும், இராணுவத் தளபதியுமான ஷவேந்திர சில்வா இதனை ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

எவ்வாறாயினும், பண்டிகை வார இறுதிக்கு இன்னும் ஒரு வாரம் இருப்பதால் நிலைமை மறுபரிசீலனை செய்யப்படும். தற்போதுள்ள நிலைமை தொடர்ந்தால், எந்தவிதமான கட்டுப்பாடுகளும் விதிக்கப்படாது.

எல்லாம் பொது மக்களின் கைகளிலேயே உள்ளது. அடுத்த ஏழு நாட்களுக்குள் அவர்கள் எவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்பதைப் பொறுத்தே எதுவும் அமையும்.

கொழும்பின் சில பகுதிகள் கடுமையான முன்னேற்றத்தைக் காட்டியுள்ளன. தனிமைப்படுத்தப்பட்ட 13 வீட்டுத் திட்டங்களில், 10 வீடமைப்புத் திட்டங்கள் இந்த வாரம் பூட்டப்பட்ட இடத்திலிருந்து நீக்கப்பட்டன.

அளுத்கம பிரதேச மக்கள் உரியமுறையில் நடந்து கொள்ளவில்லை. இதன்காரணமாக மற்றுமொரு கிராமத்துக்கும் பரவல் ஏற்பட்டுள்ளது என்றும் இராணுவத்தளபதி குறிப்பிட்டுள்ளார்.

-தமிழ்வின்-