அரச மற்றும் தனியார் ஊழியர்களுக்கு பண்டிகைக்கால கடன் வழங்கும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பம்!!

1322

பண்டிகைக்கால கடன்..

அரச மற்றும் தனியார் பிரிவுகளிலுள்ள ஊழியர்கள் உட்பட தரப்பினருக்கான கடன் வழங்கும் வசதி இன்றுமுதல் அமுலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரச மற்றும் தனியார் பிரிவு ஊழியர்கள், ஓய்வூதியம் பெறுபவர்கள், சமுர்த்தி பயனாளர்கள் மற்றும் சுய தொழில் ஈடுபடுபவர்களுக்கும் இந்த கடன் பணம் வழங்கப்படுகின்றது.

அதற்கமைய பண்டிகை கடன் பணம் வழங்கும் நடவடிக்கை இன்று முதல் முன்னெடுக்கப்படுவதாக அரச வங்கிகள் தெரிவித்துள்ளன.
கடன் திட்டங்களை உடனடியாக செயல்படுத்துமாறு திறைசேரியினால் அரசுக்கு சொந்தமான வங்கிகளுக்கு அறிவுறுத்தியது.

அதற்கமைய இந்த கடன் வசதி இலங்கை வங்கி, மக்கள் வங்கி, தேசிய சேமிப்பு மற்றும் பிரதேச அபிவிருத்தி வங்கி ஊடாக 0.625 மாதாந்த வட்டிக்கமைய வழங்கப்படுகின்றது. இந்த கடன் பணத்தை எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் 10 மாதங்களுக்குள் செலுத்த வேண்டும் என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

அரசாங்கத்தின் அதிரடி அறிவிப்பு : குறைந்த வட்டி வீதத்தில் அனைவருக்கும் கடன்!!

எதிர்வரும் நத்தார் மற்றும் புதுவருட பண்டிகை காலத்தில் பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காக அனைத்து குடும்பத்திற்கும் நிவாரண வட்டி வீதத்தில் கடன் வசதியை பெற்றுக் கொடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

பண்டிகை காலத்திற்காக அரச மற்றும் தனியார் பிரிவின் ஊழியர்களுக்கு விசேட கடன் யோசனை முறை, நத்தார் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு பல்வேறு தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக அனைத்து குடும்பத்திற்கும் இலகு வட்டிக்கு கடன் வசதி வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

3 கடன் வழங்கல் பிரிவுகளின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக ஜனாதிபதி ஊடக பிரிவு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாதாந்தம் 50ஆயிரத்திற்கு அதிகமான சம்பளம் பெறுபவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் கடன் பெற முடியும். மாத சம்பளம் 25ஆயிரம் முதல் 50ஆயிரம் ரூபாவுக்கு இடைப்பட்ட சம்பளம் பெறுபவர்களுக்கு 25ஆயிரம் ரூபாய் கடன் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாத வருமானம் 25000 இற்கும் குறைவான சம்பளம் பெறுபவர்களுக்கு 10ஆயிரம் ரூபாய் கடன் வழங்கப்படவுள்ளது. இலங்கை வங்கி, மக்கள் வங்கி, தேசிய சேமிபப்பு வங்கி, பிரதேச அபிவிருத்தி வங்கி மற்றும் சமூர்தி வங்கிகளில் இந்த கடன் பணத்தை பெறலாம்.

இந்த நிதி உதவியை பெற விரும்பும் அரச மற்றும் தனியார் பிரிவு ஊழியர்கள் தங்கள் பிரதானிகளுக்கு அது தொடர்பில் தெரியப்படுத்த வேண்டும்.

நிறுவனத்தின் பிரதானி தங்கள் ஊழியர்களுக்கு உறுதி வழங்கினால் பணி இடத்திற்கு அருகில் உள்ள அரச வங்கிகளில் தகவல்களை வழங்கினால் அந்த வங்கி கிளையினால் ஊழியர்களின் வங்கி கணக்கிற்கு தாமதமின்றி பணம் வழங்கப்படும்.

கடன் பணத்தை 10 மாதங்களுக்குள் செலுத்தி நிறைவு செய்ய வேண்டும். அதற்கு வட்டி அறவிடப்படும். நூற்றுக்கு 0.625 என்ற வட்டி வீதத்தில் இந்த கடன் பெறலாம். 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதிக்குள் ஊழியர்களின் கடன் பணம் அறவிடப்படும்.

அரச ஓய்வு பெற்றவர்கள் மற்றும் சமூர்த்தி பயனாளர்கள் இந்த கடன் பணத்தை ஓய்வூதிய திணைக்களம் மற்றும் சமூர்த்தி வங்கிகளில் வழங்கப்படுகின்றது.

முச்சக்கர வண்டி, பாடசாலை வேன் மற்றும் பஸ் வண்டி உரிமையாளர்கள் மற்றும் தனியார் பஸ் ஊழியர்கள் தங்கள் கணக்கு வைத்திருக்கும் அரச வங்கிகளில் அடையாள அட்டைகளை சமர்ப்பித்து கடன் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.