விபத்தில்..
வவுனியா சைவப்பி்ரகாசா மகளிர் வித்தியாலயத்திற்கு அருகில் கடந்த 7 ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் நபர் ஒருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று(17.12.2020) அவர் மரணமடைந்தார். குறித்த பாடசாலையில் கல்விகற்கும் தனது மகளை ஏற்றிச் செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் பயணித்த அவரை பட்டா வாகனம் மோதியதில் அவர் படுகாயமடைந்தார்.
உடனடியாக மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதி்க்கப்பட்டார். எனினும் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று ம ரணமடைந்தார். சம்பவத்தில் வவுனியா ஒயார்சின்னக்குளத்தை சேர்ந்த க.சிறிஸ்கந்தராஜா வயது 56 என்ற நபரே ம ரணமடைந்துள்ளார்.