கண்டியில்..
கண்டியில் கொரோனா தொற்றுக்குள்ளான இளம் பெண்களுடன் செல்பி புகைப்படம் எடுத்த சுகாதார பிரிவு ஊழியர் ஒருவர் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
வெளி மாவட்டங்களிலிருந்து கண்டிக்கு சென்ற 35 பேரில் 7 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். குறித்த 7 பேரும் தனிமைப்படுத்த அழைத்து செல்லப்பட்டுள்ளனர். அந்த 7 பேரில் பெண்கள் ஒரு இடத்திற்கும் ஆண்கள் ஒரு இடத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதன் போது பெண்கள் அனுப்பி வைக்கப்பட்ட இடத்திற்கு கிருமி நீக்கம் செய்வதற்காக சென்ற சுகாதார பிரிவு ஊழியர்கள் தாங்கள் கடமையை சரியாக செய்ததனை உறுதி செய்வதற்கு செல்பி புகைப்படம் எடுத்துள்ளனர். இதனை தொடர்ந்து செல்பி எடுத்த ஊழியர்களும் தனிமைப்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.