விபத்தில்..

மட்டக்களப்பு – மீராவோடை பிரதேசத்தில் இன்று (19.12) இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் காயமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உழவு இயந்திரமொன்று மீராவோடை பகுதியில் இருந்து கறுவாக்கேணி நோக்கி சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த பட்டா வாகனத்திற்கு இடம்கொடுத்த சந்தர்ப்பத்தில்,

உழவு இயந்திரத்திற்கு பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் உழவு இயந்திரத்தை முந்திச்செல்வதற்கு முயற்சித்த போதே உழவு இயந்திரத்தில் மோதுண்டு இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது குறித்த மோட்டார் சைக்கிளில் தந்தையும், மகனும் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தில் வாழைச்சேனை – விநாயகர்புரம் பகுதியைச் சேர்ந்த ஜெயசீலன் கிரிஜன் (வயது – 18) என்பவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன்,

தந்தையான சிவப்பிரகாசன் ஜெயசீலன் என்பவர் காயமடைந்த நிலையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு,மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பபு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.






