கொழும்பில்..

கொழும்பு – நாவல, சேனாநாயக்க மாவத்தையில் திடீரென விழுந்து உயிரிழந்த பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

வெலிக்கட பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய இந்த பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் நாவல, ராஜகிரிய பிரதேசத்தை சேர்ந்த 62 வயதுடைய பெண் என தகவல் வெளியாகியுள்ளது.

தனது மகனின் வீட்டிற்கு சென்ற நிலையில் மீண்டும் வீடு திரும்பிய போதே இந்த பெண் திடீரென விழுந்து மரணமடைந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த பெண் இதய சத்திரசிகிச்சை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.





